இலங்கையில் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த ஆசிய கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு இப்போட்டியை நடத்துவது கடினம் என ஆசிய கிரிக்கெட் பேரவை குழு கூட்டத்தில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சவுரவ் கங்குலியும் இதை உறுதி செய்துள்ளதோடு, ஐக்கிய அரபு இராச்சி போட்டிகள் முன்பு திட்டமிட்ட அதே தினங்களில் நடைபெறும் என்று கூறுகிறார்.