ரயில் கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான ரயில் கட்டணத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்டண திருத்தத்தின்படி, ரயில் கட்டணம் பஸ் கட்டணத்தில் சரி பாதியாக இருக்கும்.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதுடன், இந்த கட்டண திருத்தம் அமுல்படுத்தப்படும் திகதி எதிர்காலத்தில் அறிவிக்கப்படும்.