8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்று காலை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் பதவியேற்கவுள்ளார்.
பிரதம நீதியரசர் முன்னிலையில் அவர் சத்திய பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதில் ஜனாதிபதியாக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற ரகசிய வாக்கெடுப்பின் போது, 134 வாக்குகளை பெற்று புதிய ஜனாதிபதியாக தெரிவானார்.