Tuesday, July 22, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதியின் பதவி பிரமாணத்தின் போது மின்தடை - விசாரணை CID இடம் ஒப்படைப்பு

ஜனாதிபதியின் பதவி பிரமாணத்தின் போது மின்தடை – விசாரணை CID இடம் ஒப்படைப்பு

ஜனாதிபதி சத்தியப் பிரமாணம் செய்யும் போது நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட மின் தடை தொடர்பான விசாரணை CID இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

8வது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கும் விழாவை சுயாதீன தொலைக்காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பவும், ஏனைய தொலைக்காட்சிகள் மூலம் ஒரே நேரத்தில் ஒளிபரப்பவும் திட்டமிடப்பட்டிருந்தது.

குடியரசுத் தலைவர் சிவப்புக் கம்பளத்தில் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததும் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற வளாகத்தில் மின் தடை ஏற்பட்டால் இரண்டு நிமிடங்களுக்குள் ஜெனரேட்டர்கள் தானாக இயங்குவது வழக்கம் எனவும்இ ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் போது சுமார் பத்து நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Source: Lankadeepa

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles