Thursday, December 4, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுQR குறியீடு முறையில் எரிபொருள் வழங்குவதில் சிக்கல்

QR குறியீடு முறையில் எரிபொருள் வழங்குவதில் சிக்கல்

நாடுமுழுவதும் QR குறியீடு மூலம் எரிபொருள் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்காக ஒன்லைன் மூலம் இதுவரையில் 2 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பதிவு செய்துகொண்டுள்ளனர்.

ஆனால் இந்த திட்டம் நடைமுறைக்கு வருவதில் பல சிக்கல்கள் இருப்பதாக, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறிப்பாக QR குறையீட்டை ஸ்கேன் செய்வதற்கான கருவிகளை அனைத்து நிரப்பு நிலையங்களுக்கும் பெற்றுக்கொடுப்பது அசாத்தியமான விடயமாக பார்க்கப்படுகிறது.

இதனால் இந்த திட்டம் தற்போது காலவரையறை இன்றி ஒத்துவைக்கப்பட்டிருப்பதுடன், நாளை (21) முதல் வாகன இறுதி இலக்க அடிப்படையில் எரிபொருளை விநியோகிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles