நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.
தற்போது யார் பிரதமர் என்று அரசியல் வட்டாரத்தில் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவின் பெயரை முன்மொழிவதாக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அண்மையில் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், பிரதமர் பதவிக்கு விஜயதாச ராஜபக்ஷவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.