இலங்கையை “மீட்பதற்கான” பேச்சுவார்த்தைகளை துரிதமாக ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைப்பணிப்பாளர் க்றிஸ்டலினா ஜோர்ஜியாவா இதனை ஜப்பானிய ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக அரசாங்கத்தின் மீது ஏற்பட்டுள்ள கோபத்தினால் இலங்கை மக்களின் செயற்பாடுகள் குறித்த கரிசனை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கையுடன் சிறப்பான தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
தற்போது இலங்கையில் அரசாங்கம் ஒன்று அமைந்துள்ளதால், அந்த பேச்சுவார்த்தைகளை தொடர முடியும்.
இதற்காக IMF குழு ஒன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யும் என அவர் அறிவித்துள்ளார்.