நாடாளுமன்றுக்கு வருகை தரும் எம்.பிகளுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்களில் இருந்து தேவையான எரிபொருள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எம்.பி குழுவொன்று நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளதாக சபாநாயகரிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதி தேர்தலுக்காக நாடாளுமன்றுக்கு வரும் எம்பிகளுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.