காலி – மகுலுவ தொடருந்து கடவையில், மாத்தறையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த ரயிலில் மோதப்பட்டு, காரொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலத்த காயமடைந்த நிலையில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காலி, கராப்பிட்டிய கொடகந்த பகுதியில் வசித்துவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.