பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்க இந்த இரண்டு நாட்களுக்குள் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியத்துடன் நேற்று (17) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே அவர் இதனை வலியுறுத்தினார்.
இதன்படி, ஜுலை 18, 19 ஆகிய இரு தினங்களில் அருகில் உள்ள நகரங்களுக்கு வந்து போராட்டங்களை நடத்துமாறு மக்களைக் கேட்டுக்கொண்ட வசந்த முதலிகே, நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாலேயே கோட்டாபயவை விரட்ட முடிந்ததாக சுட்டிக்காட்டினார்.