எரிபொருள் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதால், அதன் பிரதிபலனை மக்கள் பெற்றுக் கொள்ள முடியும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும், விநியோகம் துரிதமாக மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே பேருந்து கட்டணத்தை குறைக்க முடியும் என அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் எரிபொருள் விலையேற்றத்துடன் ஒப்பிடும் போது பஸ் கட்டணமும் உயர்த்தப்பட்டது.
தற்போது எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டாலும், பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாத நிலை காணப்படுகிறது.
எரிபொருள் விநியோகம் துரிதமாக இடம்பெற்றால், பேருந்து கட்டணத்தை குறைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.