பேருந்து பயணக் கட்டணங்களை குறைக்குமாறு போக்குவரத்து அமைச்சர் அதிகாரிகளுக்கும் பேருந்து சேவை தொழிற்சங்கங்களுக்கும் பணித்துள்ளார்.
இதன்படி தேசிய போக்குவரத்து சபையினால் புதிய பேருந்து கட்டண விபரம் நாளை (19) வெளியிடப்படும்.
எரிபொருள் விலை குறைக்கப்பட்ட நிலையில், இதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஆனால் தனியார் பேருந்துகள் சங்கம் இன்னும் இதுகுறித்த அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை.