தேசிய எரிபொருள் அட்டையின் பிரகாரம் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதன்படி, CPC எரிபொருள் நிலையங்கள் அருகே பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
வியாழக்கிழமை முதல், QR குறியீடு மற்றும் வாகன பதிவு எண்ணின் அடிப்படையில் மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதன்படி, வாகனப் பதிவு இலக்கத்தின் கடைசி இலக்கமான 0, 01 மற்றும் 02 ஆகிய இலக்கங்களைக் கொண்ட வாகன உரிமையாளர்கள் எதிர்வரும் 21ஆம் திகதி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.