தற்போது நாடாளுமன்றத்துக்கு அருகில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் அனைத்து நுழைவாயில்களும் சாலைத் தடைகளால் மறிக்கப்பட்டுள்ளன.
மேலும் நாளை (19) காலை 10.00 மணிக்கு நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி நிலை காரணமாக, அடுத்த ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனு தாக்கல் நாளை நடைபெறவுள்ளது.
இது தொடர்பான வாக்கெடுப்பு நாளை மறுதினம் (20) நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பாக இடம்பெறும்.