ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்ல முடியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதியும் அவரது மனைவியும் நேற்று இரவு மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவிருந்தனர்.
சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் ஜனாதிபதி சிங்கப்பூர் செல்லவிருந்த நிலையில், பாதுகாப்பு நிலைமை காரணமாக பயணம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே ஜனாதிபதி தனி விமானத்தில் மாலைதீவிலிருந்து சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.