Wednesday, September 10, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தலை நடத்த 4 மாதங்கள் தேவை - தேர்தல் ஆணைக்குழு

தேர்தலை நடத்த 4 மாதங்கள் தேவை – தேர்தல் ஆணைக்குழு

அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டாலும் தேர்தலை நடத்துவதற்கு குறைந்தபட்சம் நான்கு மாதங்கள் தேவை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேவையான நிதி கிடைக்கப் பெற்றாலும் தேர்தலை நடத்த நான்கு மாத அவகாசம் தேவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் நாட்டில் தற்போதைய சூழ்நிலை தேர்தலை நடத்துவதற்கு உசிதமானதல்ல எனவும் அவர் ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

சுயாதீனமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்த வேண்டுமாயின் முதலில் மக்கள் எதிர்நோக்கி வரும் எரிவாயு, எரிபொருள் தட்டுப்பாட்டுக்கும், உணவுப் பொருட்களின் விலை ஏற்றப் பிரச்சினைக்கும் தீர்வு வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles