பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைப்பதற்கு முன்னர் குறித்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை 6 மணிக்குப் பின்னர் மின்சாரத்தை துண்டிப்பதற்கு தீர்மானிக்கப்படாத நிலையில் குறித்த பகுதியில் இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டமையானது திட்டமிடப்பட்ட செயற்பாடா? என்பது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.