Friday, January 17, 2025
24.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிவாயு விலை மீண்டும் அதிகரிப்பு

எரிவாயு விலை மீண்டும் அதிகரிப்பு

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று முதல் 12.5Kg எரிவாயு சிலிண்டரின் விலையை 50 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு கொல்களன் ஒன்றின் விலை சுமார் 200 ரூபாவால் அதிகரிக்கப்பட வேண்டிய நிலை உள்ளது.

எனினும், மக்கள் படும் இன்னல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி 50 ரூபாவால் மட்டுமே விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் கொழும்பில் தெரிவு செய்யப்பட்ட 140 இடங்களில் எரிவாயு கொல்களன்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles