Thursday, July 17, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு வரவுள்ள எரிபொருள் கப்பல்கள்

இலங்கைக்கு வரவுள்ள எரிபொருள் கப்பல்கள்

எரிபொருள் கப்பல்கள் எப்போது நாட்டுக்கு வரும் எனவும் அதன் கொடுப்பனவுகள் சம்பந்தமாகவும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பை வெளியிட்டுள்ளார்‪

IOC நிறுவனத்தில் இருந்து இலங்கைக்கு கொள்வனவு செய்யப்பட்ட டீசல் அடங்கிய கப்பல் இந்த மாதம் 15-17ஆம் திகதிகளுக்கு இடையில் இலங்கை வரும். ‬

இந்த கப்பலுக்கான முழுமையான கொடுப்பவு வெள்ளிக்கிழமை செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது.‬

அதே போன்று பெற்றோலுடனான கப்பல் ஒன்று 22-24 திகதிகளுக்கு இடையில் கொழும்பு வரும். ‬

கடந்தவாரம் முற்கொடுப்பனவு செலுத்தப்பட்ட டீசலுக்கான கப்பல் 15-17க்கு இடையிலும், பெற்றோலுக்கான கப்பல் 17-19க்கு இடையிலும் இலங்கை வரும். ‬

அவற்றுக்கான மீதக் கொடுப்பனவு இன்றும் நாளையும் செலுத்தப்படும். ‬

நாளை (12) முதல் 17ஆம் திகதிக்குள் மேலும் 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வரவுள்ளன. ‬

9ஆம் திகதி வரவிருந்த எரிபொருள் கப்பல், 12-15க்கு இடையில் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles