Friday, January 17, 2025
24.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇனி எரிவாயு பெற மின் கட்டண பட்டியல் அவசியம்

இனி எரிவாயு பெற மின் கட்டண பட்டியல் அவசியம்

நாட்டை வந்தடைந்த 3700 மெட்ரிக் டன் சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகளை இன்று முதல் லிட்ரோ நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய, இன்றும், நாளையும் கொழும்பு மற்றும் சனநெரிசல் மிக்க பகுதிகளுக்கும், நாளை மறுதினம் ஏனைய இடங்களுக்கும் எரிவாயு கொள்கலன் விநியோகிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், சமையல் எரிவாயு கொள்கலனை கொள்வனவு செய்யும் போது, கடந்த மே மாத மின்சார பட்டியலை வைத்திருத்தல் அவசியமாகும்.

இதன்மூலம் அதிகளவான எரிவாயு கொள்கலனை பதுக்கி வைக்கும் செயற்பாட்டை தவிர்க்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம், லிட்ரோ நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தள முகவரிக்கு பிரவேசிப்பதன் ஊடாக எரிவாயு விநியோகிக்கப்படும் நிலையங்களை அறிந்துக்கொள்ள முடியும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles