ஜனாதிபதி கோட்டாயபய ராஜபக்ஷ, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் கடனுதவியை கோரி இருந்தார்.
யுக்ரைனை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் குற்றச்சாட்டில், மேற்குலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்துவருகின்றன.
இந்த சூழ்நிலையில் ரஷ்யாவிடம் இலங்கை ஜனாதிபதி உதவி கோரியிருக்கின்றமை, மேற்குலக நாடுகளை அதிருப்திக்கு உள்ளாக்கும் செயல் என தெளிவாக தென்படுவதாக, BBC சிங்கள ஊடகத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.