அத்தியாவசிய காரணங்களை தவிர்ந்த ஏனைய காரணங்களுக்காக கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக தற்போது வருவதை தவிர்க்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
அந்த திணைக்களத்தின் மேலதிக கட்டுப்பாட்டாளர் நாயகம் பந்துல ஹரிஷ்சந்திர இவ்வாறு தெரிவித்தார்.
அவ்வாறு நிற்பதால் அத்தியாவசிய தேவை கருதி வருபவர்கள் தங்களுக்கான வாய்ப்பை இழப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், பிராந்திய அலுவலகங்களிலும் ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகள் வழங்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்