Thursday, August 7, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டு5000 ரூபா நாணயத்தாள் மதிப்பை இழக்கும் அபாயம்

5000 ரூபா நாணயத்தாள் மதிப்பை இழக்கும் அபாயம்

எதிர்காலத்தில் 5,000 ரூபா நாணயத் தாள் கூட மதிப்பு இல்லாமல் போகக்கூடும் என தயாசிறி ஜயசேகர எம்.பி தெரிவித்துள்ளார்.

நாடு அதிக பணவீக்கத்தை நோக்கி நகர்வதாகவும், பொருளாதார ரீதியில் நாடு பலவீனமான நிலையை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜூன் மாத பணவீக்கம் மட்டும் 54 சதவீதமாக உள்ளதாகவும், பணவீக்கத்தில் சிம்பாப்வேக்கு அடுத்தபடியாக இலங்கை தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனவரி மாதம் முதல் பணவீக்கம் மாதாந்தம் 10 தொடக்கம் 15 வீதம் வரை அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles