கொழும்பில் ஜூலை 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் 140 இடங்களில் லிட்ரோ எரிவாயு விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
ஜூலை 9 ஆம் திகதியன்று எரிவாயு கப்பல் வரவுள்ளதாகவும், இதனையடுத்து ஜூலை 11 ஆம் திகதி முதல் விநியோகம் ஆரம்பிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் ஜூலை 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் தலா 100 கொள்கலன்கள் வீதம் 140 இடங்களில் 12.5 கிலோ எடையுள்ள 140,000 எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்பின் நாளாந்தம் மொத்தம் 25,000 கொள்கலன்கள் விநியோகிக்கப்படும் என்று ரணில் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் எரிவாயு தட்டுப்பாடு தீர்க்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், அடுத்த நான்கு மாதங்களுக்குள் தட்டுப்பாடு இல்லாமல் சமையல் எரிவாயுவை வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.கொழும்பில் 140 இடங்களில் லிட்ரோ விநியோகம்