நல்லாட்சி அரச வர்த்தக வழிகாட்டல் சுற்றறிக்கையின் விதிகளுக்கு மாறாக லிட்ரோ கேஸ் நிறுவனம், 2019ஆம் ஆண்டு அதன் தலைவருக்கு 2,269,737 ரூபாவை சலுகை கொடுப்பனவாக வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
தேசிய கணக்கு தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள வருடாந்திர தணிக்கை அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சுற்றறிக்கையின் விதிமுறைகளுக்கு மாறாக நிறுவனத்தால் தலைவருக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகளில் EPF மற்றும் ETF ஆகியவை செலுத்தப்பட்டுள்ளதாக கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ளது.