Sunday, August 10, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிவசாயிளுக்கு வழங்கப்படவுள்ள சலுகை

விவசாயிளுக்கு வழங்கப்படவுள்ள சலுகை

நெற்பயிர்ச் செய்கையாளர்களால் பெறப்பட்டு, செலுத்தப்படாத விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது தொடர்பான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.

இதன்படி இரண்டு ஹெக்டேயர் அல்லது அதற்கும் குறைவான காணியில் நெற்செய்கைக்காக அரச வங்கிகளில் பெறப்பட்ட ஆரம்ப கடன் தொகையை தள்ளுபடிசெய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஏப்ரல்21 தாக்குதலும் அதைத் தொடர்ந்து வந்த கொரோனா தொற்றும் பொதுவாக எல்லாத் துறைகளிலும் நேரடி மற்றும் மறைமுக தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலைமையை மொத்த சனத்தொகையில் சுமார் 30 சதவீதமாகவுள்ள விவசாயிகளால் தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சரவையின் கவனத்திற்கு வந்துள்ளது.

மேலும் இரசாயன உரங்களுக்கு பதிலாக இயற்கை உரங்களை பயன்படுத்துவதால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதன் காரணமாக விவசாயிகள் வாங்கிய கடனை, அறவிடமுடியா கடன்கள் என வங்கிகள் வகைப்படுத்தியுள்ளன.

இதன்படி எதிர்வரும் காலங்களில் நெற்செய்கைக்கான கடன்களை மீள பெறுவதில் விவசாயிகள் எதிர்நோக்கும் சிரமத்தை கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles