Sunday, August 10, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழு மீளமைப்பு

வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழு மீளமைப்பு

வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவை மீளமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

வாழ்க்கைச் செலவை நிலையாகப் பேணுவதற்குத் தேவையான கொள்கை ரீதியானதும் நடைமுறை ரீதியானதுமான தீர்வுகளை அமைச்சரவைக்குப் பரிந்துரைப்பதற்காக வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவை மீளமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெயரிடப்பட்டுள்ளார்.

பிரதமர், கடற்றொழில் அமைச்சர், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், விவசாய அமைச்சர், பெருந்தோட்ட அமைச்சர், மின்சக்தி, எரிசக்தி அமைச்சர், வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் அதன் உறுப்பினர்களாவர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles