Saturday, November 8, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமக்களுக்கு தடையின்றி எரிபொருள் வழங்கப்படும் - எரிசக்தி அமைச்சர்

மக்களுக்கு தடையின்றி எரிபொருள் வழங்கப்படும் – எரிசக்தி அமைச்சர்

எதிர்வரும் ஓகஸ்ட் 8ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையில் 10 எரிபொருள் கப்பல்கள் இலங்கைக்கு வரவிருப்பதால், மக்களுக்கு தடையின்றி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என தான் நம்புவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 8 அல்லது 9ஆம் திகதிகளுக்குள் 40,000 மெட்ரிக் டன் அடங்கிய டீசல் கப்பல் இலங்கைக்கு வரவுள்ளது.

அத்துடன், மலேசிய எரிபொருள் நிறுவனத்திடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளது.

அதற்கமைய, 50,000 மெட்ரிக் டன் பெற்றோலும், 10,000 மெட்ரிக் டன் மண்ணெண்ணெய்யும் இலங்கைக்கு எதிர்வரும் 10 அல்லது 11 ஆம் திகதி வந்தடைய உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles