Sunday, August 10, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாலியல் குற்றம் புரிந்து தலைமறைவானவர் கோட்டாகோகமவில் கண்டுபிடிப்பு

பாலியல் குற்றம் புரிந்து தலைமறைவானவர் கோட்டாகோகமவில் கண்டுபிடிப்பு

இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில், பாலியல் வன்புணர்வு  வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர், காலி முகத்திடல் போராட்டக்களத்தில் வைத்து கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகாத நிலையில், சந்தேகத்துக்குரியவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் அவர், காலிமுகத்திடலில் கடந்த 2 மாதங்களாகத் தங்கியிருந்ததாக கிடைத்த தகவலின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்ப்பட்டவர், கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதன்போது அவரை ஜூலை 12ஆம் திகதி இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, ஜூலை 22ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles