Sunday, August 10, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடோக்கன் வழங்குவதை இடைநிறுத்தியது IOC

டோக்கன் வழங்குவதை இடைநிறுத்தியது IOC

 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டோக்கன் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

டோக்கன் வழங்கப்படுவதன் காரணமாக ஏற்படும் பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தற்போதைய தேவைக்கேற்ப எரிபொருளை விநியோகிக்க முடியாத போதும், அதனை வழங்குவதற்கு சிறந்த முறையில் செயற்பட்டு வருவதாக ஐஓசி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, திருகோணமலையில் இருந்து நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles