Sunday, August 10, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து சேவைகள் முழுமையாக தடைப்படக்கூடும்

பேருந்து சேவைகள் முழுமையாக தடைப்படக்கூடும்

எதிர்வரும் இரண்டு நாட்களில் தனியார் பேருந்து சேவைகள் முழுமையாக தடைப்படக் கூடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் 5 முதல் 10 சதவீதமான தனியார் பேருந்துகளே சேவைவயில் ஈடுபடுவதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

கொழும்பு மற்றும் அதன் அருகிலுள்ள சில இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து டிப்போக்களில் மாத்திரம் தனியார் பேருந்துகளுக்கு நேற்றைய தினம் எரிபொருள் வழங்கப்பட்டது.

அத்துடன் கொட்டாவை – மாக்கும்புர பலநோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் நேற்று சில தனியார் பேருந்துகளுக்கு டீசல் வழங்கப்பட்டது.

சுமார் 3 முதல் 4 நாட்கள் வரிசையில் நின்று பேருந்து பணியாளர்கள் எரிபொருளை பெறுவதோடு சிலர் நோய் நிலைமைக்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles