இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இம்மாதம் மூன்று எரிபொருள் கப்பல்களை மாத்திரமே பெறவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால் எரிபொருள் விநியோகத்தில் அரசாங்கம் இறுக்கமான கட்டுப்பாட்டைப் பேண வேண்டிய கட்டாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது
ஜூலை 11 மற்றும் 15 க்கு இடையில் 40,000 மெட்ரிக் டன் டீசல், ஜூலை 14 மற்றும் 15க்கு இடையில் 35,000 மெட்ரிக் டன் மசகு உண்ணெய் மற்றும் ஜூலை 22 மற்றும் 23க்கு இடையில் திட்டமிடப்பட்ட 35,300 மெட்ரிக் டன் பெட்ரோல் 92 என்பன மட்டுமே பெறப்படவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் விளைவாக லங்கா ஐ.ஓ.சி.யால் தற்போது பின்பற்றப்படுவது போன்ற மட்டுபடுத்தப்பட்ட எரிபொருள் விநியோகத்தை அரசாங்கம் தொடர்ந்து பேணும் என CPC அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் அத்தியாவசிய சேவைகளுக்கான விநியோகங்களை தொடர்ந்தும் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.