நுகர்வோருக்கு எரிவாயு கொள்கலன்களை விரைவாக வழங்குவதற்காக அதன் விநியோக நடவடிக்கைகளை விரிவுபடுத்தவுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுவை தமது முனையங்களில் மீள் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விநியோக முகவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மூலம் இந்த மீள் நிரப்பப்பட்ட எரிவாயு கொள்கலன்களில் அதிகளவில் தினசரி விநியோகிக்கவுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.