எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் ஒரு நாளில் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளும் நிலையங்களை திறக்கவுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வெளிநாடுகளுக்கு பணிக்காக செல்வோரின் நலன் கருதி, ஒரு நாளில் கடவுச்சீட்டை வழங்கும் நிலையங்களை பல இடங்களில் தற்போது திறந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இனி தூர பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு பத்தரமுல்லைக்கு வர வேண்டிய அவசியம் இருக்காது என அவர் மேலும் தெரிவித்தார்.