இலங்கை கிரிக்கெட் வீரர் எஞ்சலோ மெத்யூஸுக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.
கொவிட் அறிகுறிகள் தென்பட்டமையினால் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெப்பிட் அன்டிஜன் பரிசோதனையில் கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அவர் மற்றைய, குழு உறுப்பினர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், கொவிட்-19 நெறிமுறைகளைப் பின்பற்றி வருவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.