Friday, January 17, 2025
24.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎகிறும் சைக்கிள் விலை

எகிறும் சைக்கிள் விலை

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள மக்கள் சைக்கிள்களையும், அதன் உதிரிப்பாகங்களையும் கொள்வனவு செய்யும் போக்கு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் சைக்கிள்களைக் கொள்வனவு செய்வது அதிகரித்துள்ள சூழ்நிலையில், அதன் விலையும் அதிகரித்துள்ளது.

தற்போதுவரை சாதாரண சைக்கிள் ஒன்றின் விலை, 50,000 ரூபாவைக் கடந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், புதிய வடிவிலான மற்றும் வெவ்வேறு தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்ட சைக்கிள்கள், ஒரு இலட்சம் ரூபா வரையான விலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அதேநேரம், சைக்கிள் உதிரிப்பாகங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, உதிரிப்பாகங்களின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles