இலங்கைக்கு தற்போதைய சூழலில் உதவ முடியாது என ஜப்பான் அறிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நேற்று வியாழக்கிழமை சந்தித்தபோதே இந்த விடயம் குறித்து தெரிவித்தாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான நிதியுதவி தவறாக நிர்வகிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் எனவே, ஜப்பான் இந்த நேரத்தில் நாட்டுக்கு உதவாது என்றும் அவர் இதன்போது தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும், ஜப்பான் அதை பின்னர் பரிசீலிக்கலாம் என்றும் அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது