எம்பிலிபிட்டிய – சந்திரிகா வாவியில் தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் உயிரை மாய்த்துக்கொள்ள குதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 5 வயதான மகள் உயிரிழந்துள்ளதுடன், ஏனையோர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எம்பிலிபிட்டிய பொலிஜ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்ட 32 வயதான தாயும், 11 வயதான மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் தாய் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகனின் உடல்நிலை ஆபத்தானதாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Suicide Prevention Lifelines in Sri Lanka. There’s always help.
Mental Health 1926 (toll FREE )
CCCline 1333 (toll FREE)
Sumithrayo- 0112696666
Shanthi Maargam- 0717639898