இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பேருந்து கட்டணம் 22% ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆகக்குறைந்து பேருந்து கட்டணம் 32 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ள அதேவேளை, ஏனைய கட்டணங்கள் 22 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சின் முன்மொழிவுக்கமைய, 22 சதவீதத்தினால் பேருந்து கட்டணங்களை அதிகரிக்கவும், குறைந்த கட்டணத்தை 40 ரூபாவாக அதிகரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.