Friday, January 17, 2025
28.6 C
Colombo
செய்திகள்உலகம்கொவிட் இன்னும் முழுமையாக நீங்கவில்லை - WHO

கொவிட் இன்னும் முழுமையாக நீங்கவில்லை – WHO

கொவிட்-19 தொற்று இன்னும் முழுமையாக நீங்கவில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 தொற்றின் புதிய திரிபு இதுவரை 110 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரஸ் அதனம் கேப்ரியஸஸ் தெரிவித்துள்ளார்.

BA – 4, BA – 5 ஆகிய புதிய கொவிட் வைரஸ் திரிபுகள் தற்போது மக்கள் மத்தியில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் உலகளாவிய ரீதியில் 20 சதவீதமாக நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் திரிபுகளுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 3 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கு, உலக நாடுகள் தமது சனத்தொகையில் குறைந்தபட்சம் 70 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு முன்வர வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனத்தில் பணிப்பாளர் நாயகம் அதனம் கேப்ரியஸஸ்  கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles