இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டின் பேரில் ‘கட்டார் செரிட்டி’ (கத்தார் அறக்கட்டளை) என்ற தொண்டு நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட தடைகளை நீக்குவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் கட்டார் விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் கஞ்சன, நேற்று மாலை இந்த தொண்டு நிறுவன அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
2019 ஆம் ஆண்டு கட்டார் செரிட்டி தொண்டு நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை, நீக்குவதற்கு பாதுகாப்பு அமைச்சினால் எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது அமைச்சர் குறித்த அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.