கடந்த சில நாட்களாக நாடளாவிய ரீதியில் வீடுகளில் குழந்தை பிரசவிக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் போது வைத்தியசாலைகளுக்கு செல்வதில் உள்ள சிரமம் மற்றும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, நிக்கவெரட்டிய, புறக்கோட்டை, முகத்துவாரம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் கடந்த இரண்டு நாட்களாக இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
எப்படியிருப்பினும் குடும்ப சுகாதார ஊழியர்களின் உதவியுடன் பிரசவம் மேற்கொள்ளப்பட்டதால், குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் நலமுடன் இருப்பதாக அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவி தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.