சந்தைக்கு தேவையான எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக லாஃப் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிவாயு வரிசைகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய நிலையில், 3,400 மெட்ரிக் டன் எரிவாயு சிலிண்டர்களில் நிரப்பட்டு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நிர்ணய விலைக்கு அதிக விலைக்கொடுத்து சிலிண்டர்களை கொள்வனவு செய்ய வேண்டாமென நுகர்வோருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.