எரிபொருள் பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகத்தை தடையின்றி வழங்க அரசாங்கம் புதிய வேலைத்திட்டமொன்றை வகுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு இராச்சியம் உலகின் 7 வது பெரிய எண்ணெய் இருப்புக்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.