Wednesday, October 22, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு

வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு

வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடு செல்லும் பெண்களின் குடும்ப பின்னணி தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

முன்னர், 2  முதல் 5 வயதுக்கு மேற்படாத  பிள்ளைகளை கொண்ட பெண்கள், வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்லும்போது குடும்பப் பின்னணி அறிக்கையை அவசியம் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது.

வெளிநாடு செல்வதற்கான தகுதிகளை கொண்டிருந்தும் குறித்து குடும்ப பின்னணி அறிக்கைகளை சமர்ப்பித்த போதிலும்,  அதிகாரிகள் சில காரணங்களால் அவற்றை தாமதப்படுத்தியதன் விளைவாக, பல பெண்களின் வெளிநாட்டு கனவு தகர்ந்து போயுள்ளன.

அவ்வாறே, வெளிநாடு செல்லும் தகுதிகளை கொண்டிராத சில பெண்கள், போலியான குடும்பப் பின்னணி அறிக்கையை சமர்ப்பித்து சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்லும்போது பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் நேற்று அமைச்சரவைக்கு அறிவித்தார்.

இதனைக் கருத்திற்கொண்டு, 2 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுகளையுடைய பிள்ளைகளை கொண்டிருக்கும் பெண்கள், வெளிநாடு செல்லும்போது குடும்பப் பின்னணி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கட்டாய நிபந்தனையை நீக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles