ரயில் கட்டணங்களை திருத்தி அமைக்க போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
பேருந்து கட்டணங்களில் 50 சதவீதத்திற்கு ஒப்பாக ரயில் கட்டணங்களை திருத்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய எதிர்வரும் நாட்களில் ரயில் கட்டணம் சீரமைக்கப்படவுள்ளன.