Sunday, June 28, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டணம் தொடர்பில் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரை

மின் கட்டணம் தொடர்பில் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரை

மின் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்மொழிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபை முன்வைத்த முன்மொழிவுகளுக்கு, பதிலளிக்கும், வகையில் குறித்த கட்டணங்கள் திருத்தப்பட்டு, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்மொழிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 1 முதல் 30 அலகு வரையிலான வீட்டு மின்சார உபயோகத்திற்கான தற்போதைய மாதாந்த நிலையான கட்டணமான 30 ரூபாவை, 150 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கு இலங்கை மின்சார சபை 430 ரூபாவை முன்மொழிந்திருந்தது.

மேலும், தற்போது 1 முதல் 30 அலகுக்கு இடையில் 2 ரூபா 50 சதங்களாக உள்ள அலகொன்றின் கட்டணத்தை 8 ரூபாவினால் அதிகரிக்க இலங்கை மின்சார சபை முன்வைத்த முன்மொழிவுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles