மின் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்மொழிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபை முன்வைத்த முன்மொழிவுகளுக்கு, பதிலளிக்கும், வகையில் குறித்த கட்டணங்கள் திருத்தப்பட்டு, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்மொழிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, 1 முதல் 30 அலகு வரையிலான வீட்டு மின்சார உபயோகத்திற்கான தற்போதைய மாதாந்த நிலையான கட்டணமான 30 ரூபாவை, 150 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்கு இலங்கை மின்சார சபை 430 ரூபாவை முன்மொழிந்திருந்தது.
மேலும், தற்போது 1 முதல் 30 அலகுக்கு இடையில் 2 ரூபா 50 சதங்களாக உள்ள அலகொன்றின் கட்டணத்தை 8 ரூபாவினால் அதிகரிக்க இலங்கை மின்சார சபை முன்வைத்த முன்மொழிவுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளது.
