மாத்தறை அக்குரஸ்ஸ திப்பட்டுவாவ பிரதேசத்தின் வீடொன்றில் மாந்திரீகர் ஒருவர் தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் (26) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நில்வளவை கங்கையில் வீசியதாக கூறப்படும் மாந்திரீகரின் துண்டிக்கப்பட்ட தலை மற்றும் பயன்படுத்திய கூரிய ஆயுதம் போன்றவற்றை தேடும் நடவடிக்கை பொலிஸாரினால் முன்னெடுக்கப்படுகிறது.
கொலை சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேக நபரின் தாய் மற்றும் தந்தை ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.
தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.