Monday, October 20, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டில் தொழில் புரியாதோர் அதிகளவில் இருப்பதாக தகவல்

நாட்டில் தொழில் புரியாதோர் அதிகளவில் இருப்பதாக தகவல்

நாட்டில் குறைந்தபட்சமாக வேலைத் தேடுபவர்களை விட எந்தவொரு தொழிலையும் செய்யாதோர் அதிகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் 2021ஆம் ஆண்டிற்கான நாட்டின் வேலைப்படை தரவுளின் படி, நாட்டின் பொருளாதாரத்தில் செயற்பாட்டில் உள்ள மக்கள் தொகை சுமார் 8.55 மில்லியன் ஆக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேசமயம் நாட்டின் பொருளாதாரத்தில் செயற்பாட்டில் அல்லாதோர் சுமார் 8.58 மில்லியனாகவும் காணப்படுகிறது.

அவர்களில் , 73 சதவீதமானேர் பெண்களாக உள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles